கடலோர மாவட்டங்களில் 83.52 செ.மீ, மழை பதிவு
பெங்களூரு: 'கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே வரை, மூன்று மாதங்களில் 83.52 செ.மீ., மழை பதிவாகி உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.கர்நாடக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, மூன்று மாதங்களில் 83.52 செ.மீ., மழை பெய்துள்ளது. இதுவே அதிகபட்ச மழை.இதே காலகட்டத்தில் கடந்த 1918ம் ஆண்டு 70.65 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டும், மூன்று மாதங்களில் 111.27 செ.மீ., மழை பெய்துள்ளது.மாநிலம் முழுதும் மூன்று மாதத்தில் 32.22 செ.மீ., மழை பெய்துள்ளது. இது புதிய சாதனையாக உள்ளது.கடந்த 2022ல் மாநிலம் முழுதும் 25.55 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. மே மாதம் மட்டும் மாநிலத்தில் 24.52 செ.மீ., மழை பெய்துள்ளது. 1943ல் 18.59 செ.மீ., மழை பெய்ததே அதிகமாக இருந்தது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.