உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நம்ம மெட்ரோவில் ஒரே நாளில் 9.66 லட்சம் பேர் பயணம்

நம்ம மெட்ரோவில் ஒரே நாளில் 9.66 லட்சம் பேர் பயணம்

பெங்களூரு:'ஆர்.சி.பி., நிகழ்ச்சியை பார்க்க நகரின் பல பகுதிகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் வந்ததால், நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,66,732 பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி உள்ளனர்' என, நம்ம மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.பெங்களூரில் நம்ம மெட்ரோவில் டிக்கெட் கட்டணம் உயர்ந்த பின், நடப்பாண்டு ஏப்ரலில், அதிகபட்சமாக 9.08 லட்சம் பேர் ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து இருந்தனர்.இந்நிலையில், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கொண்டாட்ட விழாவையும் பார்க்க, நகரின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.இதுதொடர்பாக நம்ம மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை:நம்ம மெட்ரோ ரயில் போக்குவரத்தில், ஜூன் 4ம் தேதி இரண்டு வழித்தடங்களிலும் அதிகபட்சமாக, 9,66,732 பயணியர் பயணம் செய்துள்ளனர்.இளஞ்சிவப்பு வழிப்பாதையில் 4,78,334 பேரும்; பசுமை வழித்தடத்தில் 2,84,674 பேரும்; கெம்பே கவுடா இன்டர்சேஞ்ச் சந்திப்பில், 2,03,724 பேரும் என மொத்தம் 9,66,732 பேர் பயணம் செய்துள்ளனர்.முதலில் அன்றிரவு 9:00 மணி வரை, இரண்டு வழித்தடங்களிலும் 8.7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 9:00 மணிக்கு மேல், மெட்ரோ ரயில் போக்குவரத்து முடியும் வரை ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.அதுபோன்று, கெம்பே கவுடா இன்டர்சேஞ்ச் சந்திப்பில், இதுவரை 2,03,724 பேர் மட்டுமே பயணம் செய்தது அதிகபட்சமாக கருதப்பட்டது.பெரும்பாலானோர், கப்பன் பூங்கா, விதான்சவுதா, எம்.ஜி., சாலை, சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இருந்து வந்திறங்கி, புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை