உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சாலையில் கிடந்த பெண் குழந்தை

 சாலையில் கிடந்த பெண் குழந்தை

ராஜானுகுன்டே: ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காணப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. பெங்களூரின் ராஜானுகுன்டேவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மஞ்சுநாத் என்பவர் நேற்று அதிகாலை, 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில், பள்ளத்தின் அருகில், குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை கேட்ட அவர், அங்கு சென்று பார்த்தார். அங்கு துணியால் சுற்றப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தை, அழுது கொண்டிருப்பது தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், உடனடியாக தன் நண்பருக்கு போன் செய்து, அங்கு வரவழைத்தார். பிறந்து சிறிது நேரமேயான குழந்தையின் உடலில் ரத்தக்கறைகள் உலரவில்லை. மஞ்சுநாத் குழந்தையை கவனிக்காமல் சென்றிருந்தால், தெரு நாய்களுக்கு குழந்தை உணவாகியிருக்கும். குழந்தையை அவரும், நண்பரும் துாக்கி சென்று, ராஜானுகுன்டே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அங்குள்ள மருத்துவமனையில் குழந் தை சேர்க்கப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குழந்தையை யாரோ ஆட்டோவில் கொண்டு வந்து, போட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்