| ADDED : பிப் 18, 2025 06:14 AM
பெங்களூரு: மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி ஆக்கிரமித்ததாக கூறப்படும் நிலத்தில், நில அளவை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.ராம்நகர் பிடதி அருகே கேட்டகானஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த போதும், குமாரசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசின் தலையில், உயர் நீதிமன்றம் குட்டியது.விசாரணைக்கு ஆஜரானபோது, வருவாய்த்துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியாவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.இதன் பின் அரசு, நில ஆக்கிரமிப்பு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. பெங்களூரு மண்டல கமிஷனர் அமலன் ஆதித்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று கேட்டகானஹள்ளி கிராமத்தில், நில அளவை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். டேப்பை வைத்து நிலத்தை அளந்தனர். பின், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.