உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி 

 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி 

பாரதிநகர்: உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வாலிபர், நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் இர்பான் முல்லானி, 26. கடந்த 30ம் தேதி பாரதிநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அந்த வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். முதற்கட்ட விசாரணையில், மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர், பாரதிநகர் போலீசில் புகார் செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், அக்கம்பக்கத்தில் வசிப்போரிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ