உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

 கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

பெங்களூரு: மின் கம்பத்தில் அமர்ந்திருந்த கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரின் கிரி நகரில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவர் அருண்குமார், 31. நேற்று காலை அபார்ட்மென்ட் கட்டடத்துக்குள் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் மின் கம்பத்தின் மீது, அபூர்வமான கிளியொன்று அமர்ந்திருந்தது. மிகவும் விலை உயர்ந்த கிளியாகும். யார் வீட்டிலோ வளர்க்கப்பட்ட அந்த கிளி, கூண்டை விட்டு பறந்து வந்து, மின் கம்பத்தின் மீது அமர்ந்திருந்தது. இதை பார்த்த அருண்குமார், கிளியை காப்பாற்ற நினைத்தார். 'ஸ்டீல் பைப்'பில் கட்டையை சேர்த்து கட்டி, அப்பார்ட்மென்ட் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி நின்று, கிளியை விரட்ட முற்பட்டார். அப்போது ஸ்டீல் பைப், மின் ஒயரில் உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து, அருண்குமார் துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் உயிரிழந்தார். அருண்குமார் இறந்த பிறகும், கிளி அதே கம்பத்தில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ