உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இளம்பெண்ணிடம் சேட்டை தப்பியோடிய வாலிபர் கைது

 இளம்பெண்ணிடம் சேட்டை தப்பியோடிய வாலிபர் கைது

ஞானபாரதி: நடைப்பயிற்சிக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு ஞானபாரதி உபகர் லே - அவுட்டில் வசிக்கும் 25 வயது இளம்பெண், 15ம் தேதி இரவு 10:00 மணிக்கு தான் வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சிக்குச் சென்றார். வழியில் வந்த வாலிபர், நாயை தொட்டு பார்ப்பதாக கூறினார். திடீரென இளம்பெண்ணின் உடலை தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரை பிடித்துத் தள்ளிவிட்டார். அப்போது, இளம்பெண் கையில் வைத்திருந்த 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைலை பறித்துக் கொண்டு, வாலிபர் தப்பினார். இளம்பெண் புகார் அளித்ததை அடுத்து, ஞானபாரதி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், பேடரஹள்ளியை சேர்ந்த விக்னேஷ், 19, என்பவரை, ஞானபாரதி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்