உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒரு வழி பாதையில் விபத்து: கார் மோதி பெண் பலி

ஒரு வழி பாதையில் விபத்து: கார் மோதி பெண் பலி

தேவனஹள்ளி: ஒரு வழிப்பாதையில், எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த பெண், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பெங்களூரின் பானஸ்வாடியில் வசித்தவர் நேத்ராவதி, 31. இவர் தனியார் டீ ஷாப் ஒன்றில், சூப்பர்வைசராக பணியாற்றினார். இவர் நேற்று அதிகாலை 12:30 மணியளவில், தன் கணவர் சிவுவுடன் பானஸ்வாடியில் இருந்து, சிக்கபல்லாபூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், பச்சள்ளி கேட் மேம்பாலம் மீது செல்லும் போது, ஒரு வழி பாதையில் அதிவேகமாக எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நேத்ராவதி, மேம்பாலத்தில் இருந்து, துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் சிவு, லேசான காயமடைந்தார். தகவலறிந்து அங்கு வந்த தேவனஹள்ளி போக்குவரத்து போலீசார், சிவுவை மருத்துவமனையில் சேர்த்தனர். நேத்ராவதியின் உடலை மீட்டனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர், நிற்காமல் தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை