உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருமணத்துக்கு மறுத்த அத்தை மகள் மீது ஆசிட் வீச்சு

திருமணத்துக்கு மறுத்த அத்தை மகள் மீது ஆசிட் வீச்சு

சிக்கபல்லாபூர் : திருமணத்துக்கு மறுத்த அத்தை மகள் மீது, ஆசிட் வீசிய வாலிபர், தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.சிக்கபல்லாபூரின் பஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த் குமார், 25. இவரது அத்தை மகள் வைஷாலி, 19. இவரை ஒருதலையாக காதலித்த ஆனந்த் குமார், தினமும் வைஷாலியின் பின்னால் சுற்றினார்.ஆனால் அவருக்கு, ஆனந்த் குமாரை திருமணம் செய்ய விருப்பம் இல்லை. எவ்வளவோ மன்றாடியும், வைஷாலி மனம் மாறவில்லை.நேற்று மாலையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட் பாட்டிலுடன், அத்தை வீட்டுக்கு வந்த ஆனந்த் குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, பலவந்தப்படுத்தினார். ஆனால் வைஷாலி சம்மதிக்கவில்லை.கோபமடைந்த ஆனந்த் குமார், ஆசிட்டை வைஷாலி முகத்தில் வீசினார்.'போலீசாரிடம் சிக்குவோம்' என, பயந்து தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் சிக்கபல்லாபூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.வைஷாலி லேசான காயங்களுடன் தப்பினார். ஆனந்த் குமார் பலத்த தீக்காயங்களால் அவதிப்படுகிறார். சிகிச்சை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை