உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாதவிடாய் விடுமுறை பின்பற்றாத  நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மாதவிடாய் விடுமுறை பின்பற்றாத  நிறுவனங்கள் மீது நடவடிக்கை

பெங்களூரு : ''மாதவிடாய் விடுமுறையை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார். கர்நாடகாவில் அரசு, தனியார் என அனைத்து துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதம் ஒரு முறை ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை கொள்கைக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது: மாநிலத்தில் மாதவிடாய் விடுமுறை கொள்கை அமல்படுத்தப்பட்ட பின், அதை அனைத்து தனியார் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை, வெறும் சட்டம் என தனியார் நிறுவனங்கள் பார்க்கக்கூடாது. மாறாக, மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும். இது குறித்த அடுத்த கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும். பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தேவை என்பதை அனைத்து நிறுவனங்களும் உணர வேண்டும். பெண் ஊழியர்கள் எதிர் கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் வேலை செய்கின்றனர். அவர்கள் மன அழுத்தத்தை எதிர் கொள்கின்றனர். இந்த விடுமுறை நாளை தவறாக பயன்படுத்துவது தெரிந்தால், அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் மாதவிடாய் விடுமுறை கொள்கையை செயல்படுத்துவோம். அதன்பின் நன்மை, தீமைகள் குறித்து மதிப்பிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி