வறட்சியை கையாள்வதில் அலட்சியம் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சிவகுமார்
கலபுரகி: ''கர்நாடகாவில் வறட்சி சூழலை கையாள்வதில் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். அரசு அலுவலங்களுக்கு வருவோரை மரியாதையில்லாமல், ஏளனமாக நடத்தக்கூடாது. வளர்ச்சி பணிகளின் போது சாக்கு, போக்குகளை கேட்க தயாராக இல்லை. சமத்துவம், சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றுடன் மாநில அரசு பயணிக்கும். ஊராட்சி மன்ற தலைவர் மு தல், முதல்வர் பதவி வரை அனைத்து பதவிகளிலும் பொறுப்பு வகித்தவன். எனக்கு நிர்வாகம் குறித்து அனைத்து விஷயங்களும் நன்றாக தெரியும். மாநிலத்தில் நிலவும் வறட்சி சூழலை கையாள்வதில், அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணா, காவிரி, கோதாவரி ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் கைவசம் இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி, தெலுங்கானா, ஆந்திரா முதல்வர்களுடன் மாநில அரசு உயர்மட்ட பேச்சு நடத்த உள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணிகளால் தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட, ஓட்டுப்போடும் உரிமையை இழக்கக்கூடாது. ஓட்டுரிமையை பாதுகாப்பது அரசின் கடமையாகும். பி.எல்.ஓ., எனும் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், ஒவ் வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறையாவது நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். இதில், எவ்வித சமரசத்தி ற்கும் இடமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.