உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அண்ணனிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி

அண்ணனிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி

பெங்களூரு: பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தன் அண்ணனை, நடிகர் ரஜினி சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட், 85, பெங்களூரு ஹொசகெரேஹள்ளி பகுதியில் வசிக்கிறார். இவர், ஐந்து நாட்களுக்கு முன் தன் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் உள்ள ராஷ்ட்ரோதனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை பாதிப்பு, ரத்தக்கசிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்கு நடிகர் ரஜினி, நேற்று பெங்களூரு ராஷ்ட்ரோதனா மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். அண்ணனிடம் நலம் விசாரித்தார். பின், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !