உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குற்றப்பத்திரிகை தாக்கலில் மெத்தனம் தங்கம் கடத்திய நடிகைக்கு ஜாமின்

குற்றப்பத்திரிகை தாக்கலில் மெத்தனம் தங்கம் கடத்திய நடிகைக்கு ஜாமின்

பெங்களூரு : தங்கம் கடத்திய வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதால், நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் நடிகை ரம்யா ராவ், முன்னாள் காதலர் தருண் கொண்டாரு ராஜு ஆகியோரை, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.போலீஸ் கஸ்டடியில் இருந்த ரன்யாராவை, அந்நிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து, அவரது தாயார் ரோகிணி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.இதற்கிடையில், நகர சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு, ரன்யா ராவும், அவரது முன்னாள் காதலர் தருண் கொண்டாரு ராஜுவும் மனு தாக்கல் செய்திருந்தனர். வாத, விவாதத்துக்கு பின் நீதிமன்றம் கூறியதாவது:இவ்விருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தவறி விட்டனர். எனவே, ரன்யா ராவ், தருண் கொண்டாரு ராஜுவுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இருவரும் தலா 2 லட்சம் உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !