உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகையின் தாய் மீது சொந்த தங்கை தாக்குதல்

நடிகையின் தாய் மீது சொந்த தங்கை தாக்குதல்

பசவேஸ்வர நகர்: கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாஸ்யா நாகராஜ். இவரது தாயார் சுதா டாக்டராக உள்ளார். பெங்களூரின், பசவேஸ்வர நகரில் வசிக்கின்றனர்.ஒரே கட்டடத்தில் சுதாவும், நடிகை லாஸ்யாவும் முதல் மாடியிலும், அவரது தங்கை மங்களா குடும்பத்தினர் கீழ் தளத்திலும் வசிக்கின்றனர்.சுதா நாகராஜ் டாக்டர் மட்டுமின்றி, கிளாசிகல் டான்சராகவும் உள்ளார். கீழ் தளத்தின் வாகன பார்க்கிங் இடத்தில், பல ஆண்டுகளாக நடன வகுப்பு நடத்துகிறார். இங்கு நடன வகுப்பு நடத்த கூடாது என, தங்கை மங்களா தகராறு செய்தார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து அக்காவுடன் வாக்குவாதம் செய்வாராம்.இந்நிலையில் நேற்று காலை, மங்களா தன் கணவருடன் சுதாவின் வீட்டுக்கு வந்து, அவரை கண் மூடித்தனமாக தாக்கினார். இது குறித்து, போலீஸ் நிலையத்தில், சுதா புகார் அளித்துள்ளார். லாஸ்யா பணி நிமித்தமாக, கனடாவுக்கு சென்றுள்ளார். நடந்த சம்பவத்தை மகளிடம் போன் மூலம் சுதா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை