உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்

நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்

பெங்களூரு: காங்., மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே தலைமையிலான நிர்வாக மேம்பாட்டு ஆணையம், தன் ஒன்பதாவது அறிக்கையை, நேற்று தாக்கல் செய்தது. பெங்களூரில் தேஷ்பாண்டே அளித்த பேட்டி: நிர்வாகத்தில் பிரச்னை இருந்ததால், ஆட்சி நிர்வகிப்பு மேம்பாட்டுக்காக, மாநில அரசு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையமும் பலரின் கருத்துகளை கேட்டது. ஆலோசனைக்கு பின், எட்டு அறிக்கை கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்று ஒன்பதாவது அறிக்கை, முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏழு கார்ப்பரேஷன், வாரியங்களை மூடவும், சிலவற்றை சம்பந்தப்பட்ட துறைகளில் இணைக்கவும், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. முந்தைய அறிக்கையில், 5,228 சிபாரிசுகளும் தற்போதைய அறிக்கையில் 5,677 சிபாரிசுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !