உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் முன்பணம் கட்டாயமல்ல

விபத்தில் பாதிக்கப்பட்டவரிடம் முன்பணம் கட்டாயமல்ல

பெங்களூரு: விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோரிடம், முன்பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது' என, தனியார் மருத்துவமனைகளுக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை: விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு எந்தவித தாமதமும் இன்றி, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும். முன்பணம் செலுத்தினால் தான் சிகிச்சை அளிப்போம் என்று சொல்லக் கூடாது. கர்நாடக தனியார் மருத்துவமனை சட்டம் 2007ன் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்டவர் என்ற சொல், சாலை விபத்துகளை மட்டும் குறிப்பது இல்லை. தீக்காயம், விஷம் குடிப்பது, குற்றவியல் தாக்குதல் ஆகியவையும் அடங்கும். உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவோரின் குடும்பத்தினரிடம், முன்பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சையை உடனடியாக அளியுங்கள். இதை மீறும் டாக்டர்களுக்கு மூன்று மாதம் சிறை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீண்டும், மீண்டும் மீறினால் ஆறு மாதம் சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. மீண்டும் ஒரு முறை அரசு நினைவுப்படுத்தி உள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை