குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
தங்கவயல்: தங்கவயல் தாலுகாவின் நிர்வாக அலுவலகமான மினி விதான் சவுதாவில் வறட்சி மேலாண்மை பணிக்குழுக்கூட்டம் நேற்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நடந்தது. கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்து, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், ''எந்தவொரு கிராமத்திலும் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் பஞ்சாயத்து திட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார் மஞ்சுநாத், குடா தலைவர் சீனிவாசன், ஆணையர் தர்மேந்திரா, மின்துறை பொறியாளர்கள் ஹேமலதா, ஆனந்த், பூர்ணிமா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.