உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பையில் வெடிகுண்டு இருப்பதாக உதார் விட்ட விமான பயணி கைது

 பையில் வெடிகுண்டு இருப்பதாக உதார் விட்ட விமான பயணி கைது

தேவனஹள்ளி: பெங்களூரு விமான நிலையத்தில், பையை இரண்டு கட்டங்களாக சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த பயணி, பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்திற்கு, நேற்று காலை விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, பெங்களூரை சேர்ந்த அபுஅகில் அசார், 45 என்பவர் கொண்டு வந்த பையும், இரண்டு கட்டங்களாக சோதனைக்கு உட்படுத்தினர். இதனால் கடுப்பான அவர், அதிகாரிகளிடம் எனது பையில் சிறிய இரண்டு வெடிகுண்டு உள்ளது என, மிரட்டும் வகையில் கூறினார். சுதாரித்து கொண்ட அதிகாரிகள், பையை முழுமையாக சோதனை நடத்திய போது, வெடிகுண்டுகளோ, சந்தேகப்படும்படியாக பொருளோ இல்லை. ஆனாலும், வெடிகுண்டு இருப்பதாக மிரட்டும் வகையில் பேசியதால், அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசில் புகார் செய்தனர். அபு அகில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு விமான நிலையத்திற்கு அடிக்கடி, வெடிகுண்டு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை