உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நம் வாய்ப்பை பறிக்க காத்திருக்கும் ஆந்திரா தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் வருத்தம்

நம் வாய்ப்பை பறிக்க காத்திருக்கும் ஆந்திரா தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் வருத்தம்

பெங்களூரு: ''தேவனஹள்ளியில், விண்வெளி பூங்கா அமைக்க கையகப்படுத்திய நிலத்தை விடுவித்தால், நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறிக்க ஆந்திரா காத்திருக்கிறது,'' என, மாநில கனரக மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேவனஹள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் விண்வெளி பூங்கா அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தி உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடுகின்றனர். நிலத்தை கையகப்படுத்திய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்கின்றனர்.நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் 65 சதவீத பங்களிப்பை கர்நாடகா அளிக்கிறது. இந்த துறையில் நமது மாநிலம் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.ஹெச்.ஏ.எல்., சப்ரோன், போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், நம் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன.இதை விரிவுபடுத்தும் நோக்கில் விண்வெளி பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம். நிலத்தை கையகப்படுத்திய அறிவிப்பை திரும்பப் பெற்றால், நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறிக்க ஆந்திரா காத்திருக்கிறது.அம்மாநில அரசு மடகஷிரா - பெனுகொண்டா இடையே 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. விமான பாதுகாப்பு நிறுவனத்தினருக்கு அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். விண்வெளி பூங்கா திட்டம் ஆந்திராவுக்கு கைமாறிச் சென்றால், நம் மாநிலம் கடுமையான பின்னடைவை சந்திக்கும்.கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு, நியாயமான இழப்பீடு வழங்கப்படும். பெங்களூரில் இருந்து ஓசூர் 50 கி.மீ., துாரத்தில் உள்ளது.தமிழக அரசு தற்போது ஓசூர் மீது, அதிக கவனம் செலுத்தி, தொழில் துறையை மேம்படுத்தி வருகிறது.விமான நிலையம் கட்டவும் திட்டமிட்டுள்ளது. விண்வெளி பூங்கா அமைக்க 1,282 ஏக்கர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.விவசாயிகளுடன் சேர்ந்து இங்கு போராட்டம் நடத்தும், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆந்திராவுக்கு சென்று ஏன் போராடவில்லை? அவர் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. மற்ற மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் போராட்டம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை