உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திட்டங்கள் மட்டுமே அறிவிப்பு: அரசு மீது நிகில் காட்டம்

திட்டங்கள் மட்டுமே அறிவிப்பு: அரசு மீது நிகில் காட்டம்

''திட்டங்களை அறிவிப்பதுடன் சரி. அவற்றை செயல்படுத்தி, மாநிலத்தை மேம்படுத்த மாநில அரசு தவறிவிட்டது,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி: திட்டங்களை அறிவிப்பதுடன் சரி. அத்திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தை மேம்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து பணம் செலவிடப்பட்டதா, இல்லையா? அப்படியானால், அது எங்கே செலவிடப்படுகிறது என்பதற்கு அரசு பதிலளிக்க வேண்டும். கலபுரகி நகர சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. கல்யாண கர்நாடகா பகுதி மேம்பாட்டுக்காக, 5,000 கோடி ரூபாய் வழங்கியதாக அரசு கூறுகிறது. நந்தி மலை அருகே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, முதல்வர் சித்தராமையா, 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவிக்கிறார். மலை மஹாதேஸ்வரா மலைகளில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும்; விஜயபுராவில் சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அறிவிக்கிறார். ஆனால், கலபுரகியில் புதிய சாலை அமைப்பது ஒரு புறம் இருக்க, பள்ளங்களை மூடும் பணியை கூட அரசு செய்யவில்லை. குறைந்தபட்சம் அந்த பள்ளங்களை மூடும் பணியை கலபுரகியில் இருந்து துவங்கட்டும். கே.கே.ஆர்.டி.பி., எனும் கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையம், தன் பணிகளில் 30 சதவீத பணியை, கர்நாடக கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு 'அவுட் சோர்சிங்' கொடுத்துள்ளது. கே.கே.ஆர்.டி.பி., பணம் சம்பாதிப்பதற்கும், கமிஷன் வசூலிப்பதற்கும், அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை