பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு தாவணகெரேயில் மேலும் ஒருவர் கைது
தாவணகெரே: பாகிஸ்தான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து, நமது நாட்டிற்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக கடந்த 4 ம் தேதி துமகூரின் அல்லா பக், 23, தாவணகெரேயின் ஜமீர் கான், 23, ஆகியோரை, துமகூரு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அளித்த அறிவுறுத்தல் அடிப்படையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சுஹேல், 20. உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூ ரை சேர்ந்தவர். தாவணகெரே ஹரிஹராவில் உள்ள தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை செய்தார். இவரது மொபைல் போனை பறிமுதல் செய்து, வாட்ஸாப் அழைப்புகளை சரிபார்த்த போது, பயங்கரவாத அமைப்பினருடன் அடிக்கடி பேசியது தெரிந் துள்ளது.