மேலும் செய்திகள்
12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்
25-Sep-2025
பெங்களூரு: மத்திய அரசின் பல துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 1,200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி 2022ம் ஆண்டு 'ரோஜ்கர் மேளா' எனும் திட்டத்தை முன்னெடுத்தார். இது மத்திய அரசில் பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் இளைஞர்களை சேர்ப்பதை நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டது. இதன் 17வது மேளாவில் பல துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள், நேற்று நாட்டின் 40 இடங்களில் நடந்தன. அவ்வகையில், பெங்களூரு அம்பேதகர் சாலையில் உள்ள என்.ஜி.ஓ., ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் 1,200 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. மத்திய இணையமைச்சர் ஷோபா பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து, அவர் பேசியதாவது: ரோஜ்கர் மேளாவின் மூலம் மத்திய அரசின் பல துறைகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இதன் மூலம் காலி பணியிடங்கள் தாமதமின்றி நிரப்பப்படுகின்றன. அஞ்சல், ரயில்வே, உள்துறை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல துறைகளில் பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இது வெறும் கடிதம் மட்டும் கிடையாது. மாறாக, நம் தேசத்தை வலுப்படுத்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். இவ்வாறு அவர் பேசினார்.
25-Sep-2025