மேலும் செய்திகள்
ரூ.30 கோடி சுருட்டிய பெண் கைது
10-Jul-2025
பசவேஸ்வராநகர்: பெங்களூரு பசவேஸ்வராநகரை சேர்ந்தவர் சவிதா, 47. இவர், மகளிர் அமைப்புகளால் பணக்கார பெண்களுக்காக நடத்தப்படும், 'கிட்டி பார்ட்டி' எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அங்கு வரும் பெண்களிடம் 'முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களிடம் எனக்கு நட்பு உள்ளது' என்று கூறுவார். 'வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருகிறேன்; பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன்' என்று கூறி, 20 பெண்களிடம் இருந்து 30 கோடி ரூபாய் மோசடி செய்தார். கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.சவிதா கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த ஒருவர், 'நான் வக்கீல், சவிதா எனது, 'கிளையன்ட்' தான். அவரை எதற்காக கைது செய்கிறீர்கள்' என்று கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் சவிதாவை போலீசார் அழைத்து சென்றனர். தகராறு செய்த நபரின் பின்னணி குறித்து, போலீசார் விசாரித்த போது, அந்த நபரின் பெயர் யோகானந்தா, 52 என்பதும், போலி வக்கீல் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.கடந்த ஆண்டு மூதாட்டியை தாக்கிய வழக்கில், யோகானந்தாவை கே.பி.அக்ரஹாரா போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம், நான் கல்லுாரி பேராசிரியர் என்று கூறியதும் தெரிய வந்துள்ளது.
10-Jul-2025