உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கரப்பான் பூச்சி கட்சிக்கு சலுகை அசோக் குற்றச்சாட்டு

கரப்பான் பூச்சி கட்சிக்கு சலுகை அசோக் குற்றச்சாட்டு

பெங்களூரு: ‘‘சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சியினர் ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தவில்லை,’’ என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கருத்து தெரிவித்து உள்ளார். தலை மை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி, பெங்களூரு சுதந்திர பூங்காவில், கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த 8ம் தேதி போராட்டம் நடத்தினர். அந்த இடத்தில், போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி கட்சியினர் ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த தவறிவிட்டதாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுதந்திர பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், போராட்டம் நட த்துவோரிடம் இருந்து, ஜி.பி.ஏ., ஒரு லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது. இருப்பினும், கரப்பான் பூச்சி கட்சியினர் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தவில்லை. இவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று பெங்களூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளார். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் அரசு செய்யும் துரோகம். இந்த விவகாரத்தில் முதல்வர் சிவகுமார் விளக்கம் அளிக்க வேண்டும். கரப்பான் பூச்சி கட்சியினர் போராட கட்டணம் கிடையாது என்றால், துாய்மை பணியாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் நடத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை