ஹிந்துக்கள் குறிவைப்பு அரசுக்கு அசோக் கேள்வி
பெங்களூரு : ''ஹிந்துக்களை குறிவைக்கவே, சிறப்பு அதிரடிப்படையை அரசு அமைத்து உள்ளது,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:தட்சிண கன்னடாவில் ஹிந்துக்களை குறிவைத்து, ஹிந்து ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்யவே, சிறப்பு அதிரடிப்படையை அரசு அமைத்து உள்ளது. இப்படை வகுப்புவாதத்துக்கு எதிரானது அல்ல; ஹிந்துக்களுக்கு எதிராக அமைக்கப்பட்டு உள்ளது.சம்பவங்கள் நடந்து நீண்ட காலத்துக்கு பின், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஹிந்து ஆர்வலர்கள் மீது வழக்குகளை பதிவு செய்கின்றனர். இது தொடர்ந்தால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.மங்களூரில் முஸ்லிம் அமைப்புகளும், தலைவர்களும் மாநில அரசை மிரட்டி வருகின்றனர். இதனால் அவர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, ஹிந்து ஆர்வலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. ஹிந்து ஆர்வலர்கள், மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். கொல்லப்பட்ட பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.