மேலும் செய்திகள்
தங்கவயலில் பலத்த மழை
06-Oct-2025
தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு
22-Sep-2025
தங்கவயல் : தங்கவயல் அசோக தம்ம துாத புத்த சங்கத்தில் நேற்று புத்த பவுர்ணமி பூஜை நடந்தது. எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார். புத்த பிக்கு, திரி சரணம், பஞ்ச சீலம் ஓதினர். தியானமும் நடத்தப்பட்டது. பெமல் பொது மேலாளர் பரணிதர் பங்கேற்றார். அவருக்கு புத்த வழிபாடு குறித்த நுால்கள் பரிசளிக்கப்பட்டன. புத்தர் அறநெறி குறித்தும், தியானத்தின் சக்தியை பற்றியும் டாக்டர் துர்கா சிறப்புரையாற்றினார். தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் தயாளன், ஜெயராஜ், ஏ.ஜெயசீலன், சம்பத்குமார், ஸ்ரீ குமார், புருஷோத்தம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பிரதாப் குமார் தொகுத்து வழங்கினார்.
06-Oct-2025
22-Sep-2025