உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டு கேட்பது முட்டாள் தனத்தின் உச்சம்: விஜயேந்திரா

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டு கேட்பது முட்டாள் தனத்தின் உச்சம்: விஜயேந்திரா

பெங்களூரு : ''உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டை பயன்படுத்த நினைப்பது, முட்டாள்தனத்தின் உச்சம்,'' என்று, காங்கிரஸ் அரசு மீது பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டை பயன்படுத்த வேண்டும் என்று, மாநில தேர்தல் கமிஷனருக்கு அரசு அழுத்தம் கொடுக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது ஏன் நம்பிக்கை இல்லை என்று, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூற வேண்டும். தேசிய அளவில் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டனர். உண்மையை மறைக்க மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது பழி போடுகின்றனர். இயந்திரத்தில் குறைபாடு இருந்திருந்தால் கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரசால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா. மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில் அடைந்த தோல்வியின் விரக்தியில் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு சீட்டை பயன்படுத்த நினைப்பது, அரசின் முட்டாள் தனத்தின் உச்சம். தசராவை பானு முஷ்டாக் துவக்கி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஊடகம் மூலம் தெரிந்து கொண்டேன். தசராவை துவக்கி வைக்க எழுத்தாளர் தீபா பஸ்தியை ஏன் அழைக்கவில்லை என்பதை, சித்தராமையா முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி