சட்டசபை துளிகள்
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சுகாதார சேவை கிடைக்கும் வகையில், பி.பி.எல்., ரேஷன் கார்டு வினியோகம் செய்ய தனி போர்டல் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல் தகுதியுள்ளவர்களுக்கு பி.பி.எல்., ரேஷன் கார்டு வழங்க விண்ணப்பங்களை ஏற்க திட்டமிட்டு உள்ளோம் என்று, உணவு அமைச்சர் முனியப்பா கூறினார். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் துாய்மையை பராமரிக்க, கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்து விவாதிப்போம் என்று, பள்ளி கல்வி துறை அமைச்சர் மதுபங்காரப்பா சார்பாக, உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் பதில் அளித்தார். கட் சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னாலுடன், கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி ஓய்வு அறையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்.