உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாமின் கையெழுத்து போட வந்தவர் மீது தாக்குதல்

ஜாமின் கையெழுத்து போட வந்தவர் மீது தாக்குதல்

மைசூரு: மைசூரு தாலுகா, முரயனஉண்டி கிராமத்தின் நாகராஜ். இவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, மைசூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று விசாரணை நடந்தது. நாகராஜுக்கு, நீதிபதி ஜாமின் வழங்கினார். உத்தரவாத கையெழுத்து போட, நாகராஜ் உறவினர் கெண்ட கண்ணப்பா என்பவர், நீதிமன்றத்திற்கு வந்தார். இதற்கு எதிர்தரப்பு வக்கீல்கள் ரவி, சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி நாகராஜுக்கு ஜாமின் கிடைக்க, கெண்ட கண்ணப்பா கையெழுத்து போட்டார். கோபம் அடைந்த ரவி, சுரேஷ், எதிர்தரப்பின் சிவண்ணா ஆகியோர், கெண்ட கண்ணப்பாவை தாக்கினர். அவர் அளித்த புகாரில் மூன்று பேர் மீதும், அசோகபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை