உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறையில் கைதி மீது தாக்குதல் 

சிறையில் கைதி மீது தாக்குதல் 

பரப்பன அக்ரஹாரா: முறைத்து பார்த்தால் கைதி மீது சக கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்து உள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் அனில்குமார். கடந்த 2023ல் நடந்த கொலை வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதே சிறையில் 2025ல் நடந்த, கொலை வழக்கில் கைதான பரத் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில தினங்களாக பரத்தை, அனில்குமார் முறைத்து பார்த்து உள்ளார். நேற்று முன்தினம் மதியம் தனது அறையின் முன்பு, அனில்குமார் நின்றார். அங்கு வந்த பரத், அவரது கூட்டாளிகள், அனில்குமாரிடம் 'எதற்காக முறைத்து பார்க்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்தவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறை வார்டன் அளித்த புகாரின்படி பரத், கூட்டாளிகள் 8 பேர் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார், இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை