உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மதமாற்ற முயற்சி: 2 வாலிபர்கள் கைது

மதமாற்ற முயற்சி: 2 வாலிபர்கள் கைது

சித்ரதுர்கா: ஹிந்துக்களை மத மாற்றம் செய்ய முயன்ற, இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் சித்ரதுர்கா, துமகூரு மாவட்டங்களில் கட்டாய மத மாற்றம் நடந்து வந்தது. பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., கூலிஹட்டி சேகர், தன் தாயை சிலர் மத மாற்றம் செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டார்.கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அரசு, கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்நிலையில், சித்ரதுர்கா டவுன் பிரசாந்த் நகரில் உள்ள ஒரு வீட்டில், ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய சிலர் முயற்சிப்பதாக, தீபக் ராஜ் என்பவர் சமீபத்தில் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், தனஞ்ஜெயா, 35, ஜோஸ்வா இஸ்ரேல், 20, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் இருவரும் ஏழை ஹிந்துக்களை குறிவைத்து, அவர்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக கூறி, மத மாற்றம் செய்ய முயற்சித்ததும், ஹிந்து மதம் குறித்து அவதுாறு பரப்பியதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை