உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமி கடத்தல் முயற்சி; விசாரணையில் திருப்பம்

சிறுமி கடத்தல் முயற்சி; விசாரணையில் திருப்பம்

பீதர்; பீதரில் சிறுமியை கடத்த முயன்றதாக கூறப்பட்ட சம்பவத்தில், திருப்பம் ஏற்பட்டுள்ளது. பைக்கில் வந்த இளைஞர், குழந்தை திருடன் அல்ல என்பதை, போலீசார் கண்டுபிடித்தனர்.பீதர் நகரின் வித்யா நகர் லே - அவுட்டில், நேற்று முன் தினம் இரண்டு சிறுமியர் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் நோட்டம் விட்டார். அதன் பின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, 5 வயது சிறுமியை துாக்க முற்பட்டார்.சத்தம் கேட்டு பெற்றோர் வெளியே வந்ததால், அந்த இளைஞர் சிறுமியை விட்டு விட்டு பைக்கில் தப்பியோடிவிட்டார். அவர் குழந்தை திருடனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிறுமியின் பெற்றோர், காந்தி கஞ்ச போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசாரும் அங்கு வந்து, வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பைக் எண்ணை வைத்து, அந்த இளைஞரை நேற்று கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர் திருடன் அல்ல என்பது தெரிந்தது.அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அழைப்பிதழ் கொடுக்க, உறவினர் வீட்டுக்கு வந்தார். முகவரி தெரியாமல் அலைந்தார்.சிறுமிகளிடம் முகவரி கேட்பதற்காக உள்ளே வந்தார். அவர்கள் சத்தம் போட்டதால் பயந்து ஓடிவிட்டதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை