உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் போராட்டம்

 அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் போராட்டம்

: சபரிமலைக்கு சென்ற, கர்நாடக அய்யப்ப பக்தர்கள் வாகனங்களை, கேரள போலீசார் எருமேலியில் நிறுத்தியதை கண்டித்து, சாலையில் அமர்ந்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பூஜை நடப்பதை ஒட்டி, நாடு முழுதும் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களை சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் சென்ற கர்நாடக வாகனங்களை, சபரிமலையில் இருந்து 45 கி.மீ., துாரத்தில் உள்ள எருமேலி என்ற இடத்திலேயே, கேரள போலீசார் நிறுத்தினர். எருமேலியில் இருந்து சபரிமலைக்கு பஸ்சில் செல்லும்படி கூறினர். ஆனால் கேரள பதிவெண் கொண்ட, வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். இதனை கண்டித்து கர்நாடக அய்யப்ப பக்தர்கள், கேரள அரசுக்கு எதிராக, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுவதாக கோஷம் எழுப்பினர். கேரள போலீசார் பேச்சு நடத்தினர். பின், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்களை அனுமதிக்கும் விஷயத்தில், கேரள அரசிடம், கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். கோகி லு லே -- அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அரசு தலையிட்டது; கேரள பள்ளிகளில் மலையாளத்தை முதல் மொழியாக்கும் மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்ததால், இரு மாநில உறவும் தற்போது சுமுகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை