மேலும் செய்திகள்
தங்கவயலை வாழ வைக்கும் ரயில் பயணங்கள்
05-Oct-2025
தங்கவயல்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து, கோலார் மாவட்டத்தில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 'பந்த்'திற்கு தங்கவயல் தவிர மற்ற பகுதிகளில் பெரும் ஆதரவு இருந்தது. கோலார் மாவட்ட 'பந்த்'திற்கு ஜனபரா வேதிகே என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் கோலார், பங்கார்பேட்டை, மாலுார், தங்கவயல், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய 6 தாலுகாவிலும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்தது. 'பந்த்'திற்கு விவசாயிகள் சங்கம், மகளிர் சங்கம், தலித் அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தங்கவயல் தங்கவயலில் எம்.ஜி.மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. பெட்ரோல் 'பங்க்'குகள், ஹோட்டல்கள், டீ கடைகள், ஜுவல்லரி கடைகள், பள்ளிகள், கல்லுாரிகள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பெமல் தொழிற்சாலை இயங்கியது. ஓரிரு பஸ்கள் தவிர வழக்கம் போல பல வாகனங்கள் இயங்கின. வங்கிகள், தபால் நிலையம், நீதிமன்றம், இயங்கின. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பால், பூக்கடைகள் திறந்திருந்தன. மொத்தத்தில் தங்கவயலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 'பந்த்'திற்கு ஆதரவாக தங்கவயல் பாதுகாப்பு ஐக்கிய முன்னணி சார்பில் நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். பங்கார்பேட்டை பங்கார்பேட்டையில் வாகனங்கள் எதுவுமே இயங்கவில்லை. நகரமே வெறிச் சோடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கின. தலித் அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் கொடிகளுடன் ஊர்வலம் நடத்தினர். இதேபோல் கோலார், முல்பாகல், சீனிவாசப்பூர், மாலுாரிலும் 'பந்த்' வெற்றி பெற்றது. எங்கும் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
05-Oct-2025