உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி பூஜைகள்

 வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி பூஜைகள்

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை நான்காவது பிளாக் ஆதிசக்தி மாரியம்மன், ஸ்ரீ கல்யாண வராஹி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு ஆடி நவராத்திரி எனும், கன்னட ஆஷாட நவராத்திரி அலங்கார பூஜைகள், இம்மாதம் 13ல் தொடங்குகிறது. அன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றம், இரவு 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடக்கிறது. 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினமும், இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. 23ம் தேதி வியாழன் அன்று, மாலை 6:00 மணிக்கு வாராஹி ஹோமம், மங்கள திரவிய அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் தணிகாசலம், பொதுச் செயலர் எல்.தினகரன், பொருளாளர் ராஜேஷ், துணைத் தலைவர் ஆப்ரேஷன், இணைச் செயலர் என்.கே.பிரபு, ஆலோசகர்கள் குமார், திருமுருகன், மணிவண்ணன், பத்மநாபன், கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !