தங்கவயலில் பேனர்கள் கிழிப்பு
தங்கவயல்: தங்கவயலில், கன்னடத்தி ல் தான் பெயர் பலகைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கன்னட அமைப்பினர் பேனர்கள் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட அமை ப்பினருடன் வந்த நகராட்சி ஆணையர் ஸ்ரீதர் ஆங்கிலம், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பெயர் பலகைகளையும் கிழித்தெறிய உத்தரவிட்டார். இதனால், தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் பேனர் கிழிக்கப்பட்டது. இது, மொழி வேறுபாடின்றி வாழும் தங்கவயலில் அதிருப்தியை ஏற்படுத்தியது.