உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதி கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் அரசுக்கு பசவராஜ் ஹொரட்டி எதிர்ப்பு

ஜாதி கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் அரசுக்கு பசவராஜ் ஹொரட்டி எதிர்ப்பு

பெங்களூரு : ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை நியமிப்பதற்கு மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என, அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு, பசவராஜ் ஹொரட்டி எழுதிய கடிதம்: மாநிலத்தில் கல்வியின் தரம் குறைவது, எனக்கு கவலை அளித்துள்ளது. இதற்கு ஆசிரியர்களை, கல்வி சாராத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதே, முக்கிய காரணமாகும். இதை தவிர்க்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, ஆசிரியர்களை குறிப்பாக தொடக்க, உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க, அரசு முடிவு செய்திருப்பது சரியல்ல. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன். இத்தகைய நடைமுறையால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் பலர், எழுதுவது, படிப்பதில் பின் தங்கியுள்ளனர். தொடக்க பள்ளியில் அடிப்படை கல்வி அளிப்பதில் பின்னடைவு ஏற்படுவதால், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களின் கல்வி தரம் குறைகிறது. இதற்கு யார் பொறுப்பு. ஆய்வுகள், ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிகள், தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவதால், அவர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவதில்லை. சிறார்களுக்கு தரமான கல்வியளிக்க முடியாவிட்டால், அது கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மீறியதாகும். எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, ஆசிரியர்களை நியமிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை