மேலும் செய்திகள்
பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்
14 hour(s) ago
போக்குவரத்து துறைக்கு ரூ.7,000 கோடி நிதியுதவி
14 hour(s) ago
பெண்ணுக்கு கொடுமை போலீசார் மீது குற்றச்சாட்டு
14 hour(s) ago
சிக்கபல்லாபூர்: மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் வயிற்றில் பேட்டரிகள், சாவிகள், லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிக்கபல்லாபூர் நகரின் நல்லகதிரேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ், 28. கடந்த சில நாட்களாக, குடிபன்டே தாலுகாவின், பாபுஜிநகரில் உள்ள, தன் அக்கா வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், தன் அக்காவின் வீட்டில் துாக்கிட்ட நிலையில், இறந்து காணப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த குடிபன்டே போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்ட போது, மகேஷ் துாக்கிட்ட நிலையில் இருந்தாலும், அவரது உடல் தரையில் இருந்ததால், போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை நடத்திய போது, மகேஷின் வயிற்றில் லைட்டர், பேட்டரி செல், சாவிகள், ஹேர் பின், மருந்து டியுப்கள், இரும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பார்த்து, டாக்டர்களே அதிர்ச்சி அடைந்தனர். 'இவ்வளவு பொருட்கள் அவரது வயிற்றுக்குள் எப்படி சென்றன. இத்தகைய பொருட்களை அவர் விழுங்கியதை, தாங்கள் பார்த்ததே இல்லை' என, குடும்பத்தினர் கூறியுள்ளனர். மகேஷுக்கு கடன் தொல்லை இருந்தது. இதற்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago