பேசும் போது விழிப்புடன் இருங்க! பா.ஜ., சுரேஷ்குமார் அட்வைஸ்
பெங்களூரு: “தலைவர்கள் பேசும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நான் ஜன சங்கத்தில் இருந்து, பா.ஜ.,வில் அடையாளம் காணப்பட்டவன். சாதாரண தொண்டராக பணியாற்றினேன். நான் பா.ஜ.,வில் சேரவில்லை.அந்த கட்சியிலேயே பிறந்தவன். எனக்கும், கட்சிக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது.கட்சி தொண்டர்களுக்கு, பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, எங்களின் கடமை. கட்சியில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால், அதை கட்சிக்குள்ளேயே பேசி, சரி செய்து கொள்ள வேண்டும்.இது என் கட்சி, இதன் கவுரவம் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். பிரச்னை பெரிதானால் தொண்டர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படும்.பசனகவுடா பாட்டீல் எத்னாலை, நான் அருகில் இருந்து பார்த்தவன். நானும், அவரும் ஒரே நேரத்தில் சட்டசபைக்குள் நுழைந்தவர்கள். வாஜ்பாய் அரசில், எத்னால் அமைச்சராக இருந்தவர்.நாம் பேசும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மை நம்பியுள்ள கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.