உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வரும் 20ல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல்

 வரும் 20ல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல்

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்க தேர்தல், இம்மாதம் 20ம் தேதி நடக்கிறது. பி.இ.எம்.எல்., தொழிற்சங்க அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியான தங்கவயல் வக்கீல்கள் சங்க பொதுச் செயலர் ஆர்.ஜோதிபாசு அளித்த பேட்டி: தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிலாளர் சங்கத்தின் 22-வது தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இம்மாதம் 20ம் தேதி காலை 6:30 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றே ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன. இந்த தேர்தலில், 877 பேர் ஓட்டுப் பதிவு செய்ய தகுதியுள்ளவர்கள். ஜெ.ஏ.சி., எனப்படும் 'ஜாய்ன்ட் ஆக் ஷன் கமிட்டி-' சக்கரம் சின்னத்திலும், டபிள்யு.யு.எப்., எனப்படும் 'ஒர்க்கர்ஸ் யுனிட்டி பாரம்' என்ற அமைப்பினர், சுத்தியல் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். தலைவர், இரு துணை தலைவர்கள், பொதுச் செயலர், இணை செயலர், துணை செயலர், அமைப்பு செயலர், பொருளாளர், 19 செயற்குழு உறுப்பினர்கள்; தொழிலாளர் நல நிதி குழுவில் நான்கு பேர்; கேன்டீன் குழுவில் ஆறு பேர்; ஒர்க்ஸ் கமிட்டிக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, துணை தேர்தல் அதிகாரிகள் சுப்பாராவ், சேஷகிரி, குருதத், டோம்னிக் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை