உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு தடகள வீரருக்கு மத்திய அரசு விருது

 பெங்களூரு தடகள வீரருக்கு மத்திய அரசு விருது

- நமது நிருபர் - பெங்களூரு தடகள வீரர் பாரத்துக்கு, மத்திய அரசின் தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது கிடைத்து உள்ளது. பெங்களூரின் கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பாரத், 35. சர்வதேச தடகள வீரர். தற்போது மாண்டியாவில் உள்ள ஜே.எஸ்.எல்., விளையாட்டு அகாடமியில், உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குநராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக தடகள போட்டிகளில் பங்கேற்கும் பாரத், பல விருதுகளை வென்று அசத்தி உள்ளார். இவரது சாதனையை பாராட்டும் வகையில், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய உடற்கல்வி அறக்கட்டளை இணைந்து, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத்துக்கு, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது வழங்கியது. இ துதவிர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான டாக்டர் ஜி.பி.கவுதம் விருதையும் அவர் பெற்றார். பாரத்துக்கு விருதுகளை வழங்கி, மத்திய நெடுஞ்சாலை துணை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி