உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  துாய்மை காற்று கணக்கெடுப்பு 32வது இடத்தில் பெங்களூரு

 துாய்மை காற்று கணக்கெடுப்பு 32வது இடத்தில் பெங்களூரு

- நமது நிருபர் -: துாய்மை காற்று கணக்கெடுப்பு - 2026ல், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிரிவில், பெங்களூருக்கு 32வது இடத்தில் உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகம் 'துாய்மை காற்று கணக்கெடுப்பு - 2026'ஐ அறிவித்தது. என்.சி.ஏ.பி., எனும் தேசிய துாய்மை காற்று திட்டத்தின் கீழ், காற்றில் உள்ள மாசு அளவை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மாசு கட்டுப்பாட்டுக்காக நகரங்கள் எடுத்த நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடிப்படையில், தரவரிசை வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில், 152.6 புள்ளிகளுடன், 32வது இடத்தில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது. 11வது இடத்தில் தாவணகெரே, 19வது இடத்தில் ஹூப்பள்ளி - தார்வாட்; 32வது இடத்தில் பெங்களூரு; 36வது இடத்தில் கலபுரகி நகரம் ஆகிய கர்நாடகா மாநில நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பெருநகரங்களான டில்லி, 21வது இடம்; மும்பை 28வது இடத்திலும் உள்ளது. ஆனால், பெங்களூரு பின் தங்கி உள்ளது. இதற்கு வாகன புகை, போக்குவரத்து நெரிசல், கட்டுமான துாசுகள் ஆகியவையே பெங்களூரு பின்னடைவுக்கு காரணங்களாக கூறப்படுகிறது. அதே வேளையில், தேசிய அளவில், 11வது இடத்திலும், மாநில அளவில் முதலிடத்திலும் தாவணகெரே நகரம் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை