உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா நீச்சல் போட்டிகளில் பெங்களூரு வீரர்கள் சாதனை

தசரா நீச்சல் போட்டிகளில் பெங்களூரு வீரர்கள் சாதனை

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, 'சி.எம்., கோப்பை' நீச்சல் போட்டி, சாமுண்டி விஹார் விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் துவங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் பிரிவு 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் சூர்யா ஜோயப்பா முதலிடமும்; சாயேஷ் கி னி இரண்டாவது இடமும்; பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் மூன்றாவது இடமும் பிடித்தனர். 'பட்டர்பிளை' பிரிவில் பெங்களூரின் அனிஷ் கோரே முதலிடமும்; பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் இரண்டாவது இடமும்; பெங்களூரின் சூர்யா ஜோயப்பா 3வது இடமும் பிடித்தனர். 200 மீட்டர் 'ஸ்ட்ரோக்'கில் பெங்களூரில் உஜ்வல் ரெட்டி முதலிடத்தையும்; ராகவ் இரண்டாவது இடத்தையும்; திகந்த் மூன்றாவது இடத்தையும் வென்றனர். 400 மீட்டர் 'பிரீஸ்டைலி'ல், பெங்களூரின் தோனிஷ் முதலாவது இடத்தைப் பிடித்தா ர். பெலகாவியின் தர்ஷன் வாரூருக்கு இரண்டாவது இடமும்; பெங்களூரின் துருவ்க்கு மூன்றாவது இட மும் கிடைத்தது. தனி நபர் 'மெட்லே' பிரிவில், பெங்களூரின் சூர்யா ஜோயப்பா முதலிடமும், பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் இரண்டாவது இடமும்; பெங்களூரின் உஜ்வல் ரெட்டி மூன்றாவது இடமும் பெற்றனர். பெண்கள் 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் லக்ஷ்யா சிவா னந்தா முதலிடமும், ஹிதாஷி இரண்டாவது இடமும்; பெங்களூரு ரூரலின் லிபிகா தேவ் மூன்றாவது இடமும் பிடித்தனர். 100 'மீட்டர் பட்டர்பிளை'யில் பெங்களூரின் ஹிதாஷி முதலிடமும், லக்ஷ்யா சிவானந்தா இரண்டாவது இடமும், பெலகாவியின் வேதா கானோல்கர் மூன்றாவது இடமும் பெற்றனர். 200 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் ஸ்ருதிக்கு முதலிடமும், தன்மயி தர்மேஷுக்கு இரண்டாவது இடமும், பெலகாவியின் வேதா கானோல்கருக்கு மூன்றாவது இடமும் கிடைத்தன. 400 மீட்டர் 'பிரீ ஸ்டைலி'ல், பெங்களூரு ரூரலின் லிபிகா தேவ் முதலிடமும், தட்சிண கன்னடாவின் தேவிகா இரண்டாவது இடமும், பெலகாவியின் நிதி முச்சண்டி மூன்றாவது இடமும் பிடித்து அசத்தி உள்ளனர். மைசூரு, செப். 25-மைசூரு தசராவை முன்னிட்டு, 'சி.எம்., கோப்பை' நீச்சல் போட்டி, சாமுண்டி விஹார் விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் துவங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் பிரிவு 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் சூர்யா ஜோயப்பா முதலிடமும்; சாயேஷ் கி னி இரண்டாவது இடமும்; பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் மூன்றாவது இடமும் பிடித்தனர். 'பட்டர்பிளை' பிரிவில் பெங்களூரின் அனிஷ் கோரே முதலிடமும்; பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் இரண்டாவது இடமும்; பெங்களூரின் சூர்யா ஜோயப்பா 3வது இடமும் பிடித்தனர். 200 மீட்டர் 'ஸ்ட்ரோக்'கில் பெங்களூரில் உஜ்வல் ரெட்டி முதலிடத்தையும்; ராகவ் இரண்டாவது இடத்தையும்; திகந்த் மூன்றாவது இடத்தையும் வென்றனர். 400 மீட்டர் 'பிரீஸ்டைலி'ல், பெங்களூரின் தோனிஷ் முதலாவது இடத்தைப் பிடித்தா ர். பெலகாவியின் தர்ஷன் வாரூருக்கு இரண்டாவது இடமும்; பெங்களூரின் துருவ்க்கு மூன்றாவது இட மும் கிடைத்தது. தனி நபர் 'மெட்லே' பிரிவில், பெங்களூரின் சூர்யா ஜோயப்பா முதலிடமும், பெலகாவியின் தனுஜ் ராகேஷ் சிங் இரண்டாவது இடமும்; பெங்களூரின் உஜ்வல் ரெட்டி மூன்றாவது இடமும் பெற்றனர். பெண்கள் 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் லக்ஷ்யா சிவா னந்தா மு தலிடமும், ஹிதாஷி இரண்டாவது இடமும்; பெங்களூரு ரூரலின் லிபிகா தேவ் மூன்றாவது இடமும் பிடித்தனர். 100 'மீட்டர் பட்டர்பிளை'யில் பெங்களூரின் ஹிதாஷி முதலிடமும், லக்ஷ்யா சிவானந்தா இரண்டாவது இடமும், பெலகாவியின் வேதா கானோல்கர் மூன்றாவது இடமும் பெற்றனர். 200 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்'கில் பெங்களூரின் ஸ்ருதிக்கு முதலிடமும், தன்மயி தர்மேஷுக்கு இரண்டாவது இடமும், பெலகாவியின் வேதா கானோல்கருக்கு மூன்றாவது இடமும் கிடைத்தன. 400 மீட்டர் 'பிரீ ஸ்டைலி'ல், பெங்களூரு ரூரலின் லிபிகா தேவ் முதலிடமும், தட்சிண கன்னடாவின் தேவிகா இரண்டாவது இடமும், பெலகாவியின் நிதி முச்சண்டி மூன்றாவது இடமும் பிடித்து அசத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ