உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., பல்கலைக்கு மன்மோகன்சிங்  பெயர் வைக்க சட்டசபையில் ஒப்புதல் 

பெங்., பல்கலைக்கு மன்மோகன்சிங்  பெயர் வைக்க சட்டசபையில் ஒப்புதல் 

பெங்களூரு : பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை வைக்க, சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு ஞானபாரதியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெயர் வைப்பது தொடர்பான தீர்மானத்தை, சட்டசபையில் உயர்கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியது: பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பெயரை வைப்பது அவருக்கு வழங்கப்படும் மரியாதை இல்லை. அவரது ஆளுமையை அவமதிப்பது. ஏற்கனவே இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு, மன்மோகன்சிங் பெயரை வைப்பது தான் காங்கிரஸ் அரசின் சாதனையா. புதிதாக பல்கலைக்கழகம் துவங்கி அதற்கு அவர் பெயர் வைத்திருந்தால் நாங்கள் ஏற்று கொண்டு இருப்போம். மன்மோகன்சிங்குடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் பிரதமராக இருந்த போது அவரை சந்தித்து பேசினேன். பெங்களூரு மீது எனக்கு அன்பு உண்டு. பெங்களூரு கர்நாடகாவி ன் தலைநகர் மட்டும் இல்லை. முழு நாட்டின் மையம் என்று என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் பேசினார். தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசி தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின், பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பெயரை வைக்க ஒருமனதாக ஒப்புதல் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை