மேலும் செய்திகள்
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
21-Nov-2025
ஷிவமொக்கா: வாழ்க்கையில் விரக்தி அடைந்து, சிக்கந்துார் பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்தவரை, பீஹாரை சேர்ந்த பொறியாளர் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஷிவமொக்காவின் சிக்கந்துார் பாலத்தின், பீஹாரை சேர்ந்த பொறியா ளர் ரஞ்ஜேஷ் பாண்டே பணியில் இருந்தார். அப்போது, பாலத்தில் ஒருவர் நடந்து வருவதை பார்த்தார். அந்ந நபர் திடீரென பாலத்தின் மீது ஏறி நின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்ஜேஷ் பாண்டே, ஆற்றில் குதிக்க தயாராக இருந்த நபரை நோக்கி சென்றார். எந்தவித பதற்றமும் காட்டாமல், அவரிடம் விசாரித்தார். அந்த நபர், மைசூரு நகரின் ஸ்ரீராமபூர் பேபன் லே - அவுட்டை சேர்ந்த ஆஞ்சநேயா, 47 என்பதும், பட்டய கணக்காளர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால், ஞாயிற்று கிழமை காலையில் சிக்கந்துாருக்கு வந்து, சிக்கந்துார் சவுடேஸ்வரி தேவியை தரிசனம் செய்ததாகவும், அதன்பின், அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரை சாப்பிட்டு, பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார். அப்போது ரஞ்ஜேஷ் பாண்டே, 'நான் பீஹாரை சேர்ந்தவன். எனக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். அங்கிருந்து இங்கு வந்து பணி செய்கிறேன் என்றால், என் குடும்பத்துக்காக தான். இதுபோன்ற முட்டாள் தனமான செயலை செய்யக்கூடாது' என்று கூறி சமாதானப்படுத்தினார். மேலும், 112க்கு போன் செய்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், ஆஞ்சநேயாவை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஞ்சநேயாவை சமாதானப்படுத்தும் சம்பவம் அனைத்தும், ரஞ்ஜேஷ் பாண்டே, தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதில், ரஞ்ஜேஷ் பாண்டே ஹிந்தியில் பேசுவதும், அதற்கு ஆஞ்சநேயா பதிலளிப்பதும் பதிவாகி உள்ளது. ரஞ்ஜேஷ் பாண்டேயின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
21-Nov-2025