உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிகானீர் ரயில் சேவை நீட்டிப்பு

 பிகானீர் ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு: பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், யஷ்வந்த்பூர் - பிகானீர் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கை: பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு, புதன்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் - 06543 இயக்கப்படு கிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதம், 25ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக இருந்தது. கோடை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும், 8, 15, 22, 29 ம் தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து வழக்கம் போல காலை 7:00 மணிக்கு ரயில் புறப்படும். மறுமார்க்கமாக பிகானீரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு 11, 18, 25, அடுத்த மாதம் 2ம் தேதிகளில் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. இந்த ரயில், கர்நாடகாவில் இருந்து மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களை கடந்து, ராஜஸ்தானுக்குள் செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை