போலி செய்திகளை தடுக்க மசோதா
முதல்வர் மாற்றம் குறித்து மீண்டும் மீண்டும் பேச தேவையில்லை. ஆட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. முதல்வரே ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர் பதவி விவகாரத்தில் நாடகம் நடக்கிறது. நானும் ஒரு நாடக கம்பெனியை திறக்க விரும்பவில்லை. உயர்மட்ட குழு அனைத்தையும் கண்காணிக்கிறது; தக்க சமயத்தில் சரியான முடிவுகளை எடுக்கும். சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலி செய்திகள் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும்.கடலோர மாவட்டங்களில் போதைப்பொருள், மணல், கல் மாபியாக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.அரசு வேலைகளில் உள் இடஒதுக்கீடு பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆட்சேர்ப்பு பணிகள் நடக்கும். தலித் அரசு அதிகாரிகளுக்கு அநீதி ஏற்பட்டதாக யாரும் என்னிடம் புகார் அளிக்கவில்லை. அப்படி ஏதாவது வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.- பரமேஸ்வர்உள்துறை அமைச்சர்