மேலும் செய்திகள்
வயிற்று வலி தாளாமல் விவசாயி தற்கொலை
23-Aug-2025
பெலகாவி: நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும் போது, அவரது குடல் வாலை அறுத்துவிட்டு, தையல் போட்டு டாக்டர்கள் குளறுபடி செய்துள்ளனர். பெலகாவி நகரில் வசிப்பவர் மகேஷ். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர், ஜூலை 20ம் தேதியன்று, சிகிச்சைக்காக பெலகாவி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் கட்டி இருப்பதை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்; குடும்பத்தினர் சம்மதித்தனர். அதே நாளில் அவருக்கு, பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், கட்டியுடன் சேர்த்து, தவறுதலாக குடலையும் வெட்டிவிட்டனர். அதன்பின் தையல் போட்டு அனுப்பிவிட்டனர். இது மகேஷ் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். சில நாட்களாக அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதன்பின் வேறு மருத்துவனையில் ஸ்கேன் செய்து பார்த்த போது, குடலை வெட்டி தையல் போட்டிருப்பது தெரிந்தது. தற்போது அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவிட்டனர். மகனின் சிகிச்சைக்காக தந்தை, வீட்டை விற்றுள்ளார். பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, அரசிடம் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
23-Aug-2025