உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி இல்லை பா.ஜ.,

முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி இல்லை பா.ஜ.,

கலபுரகி: ''பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி இல்லை,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார்.கலபுரகியில் நேற்று நடந்த மக்கள் ஆக்ரோஷ யாத்திரையில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:காங்கிரஸ் ஆட்சியில் நம் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும், உங்களுடன் நான் இருக்கிறேன். நம் தொண்டர்கள், ஹிந்து அமைப்பினர் அவமதிக்கப்படும்போது இருவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். பா.ஜ., தொண்டர்கள் யாருடனும் சமரச அரசியல் செய்ய வேண்டாம்.தேர்தல் நேரத்தில் அரசியல் செய்வதற்கு பதிலாக, இப்போது இருந்தே அரசியல் செய்வோம். அடுத்த சட்டசபை தேர்தலில் கலபுரகியில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்டுவோம்.மக்கள் நம் மீது காட்டும் அன்பை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர்.

ராவண ராஜ்யம்

ராம ராஜ்யம் நடத்தப் போவதாக கூறி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த சித்தராமையா தற்போது ராவண ராஜ்யம் நடத்துகிறார். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை முற்றிலும் மறந்துவிட்டார்.மாநில மக்களை பிச்சைக்காரர்கள் போன்று நடத்துகிறார். கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு பல கோடி ரூபாய் பணம் செலுத்த வேண்டும். மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். கலபுரகி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிய, அமைச்சர் பிரியங்க் கார்கே எங்கே போனார்?இவ்வாறு அவர் பேசினார்.

வலி தெரியுமா?

கலபுரகியை தொடர்ந்து பீதரில் நடந்த யாத்திரையின்போது விஜயேந்திரா பேசியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு பா.ஜ., அரசு ஒதுக்கிய 38,500 கோடி ரூபாயை வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். சித்தராமையா ஏழைகள், விவசாயிகள் கண்ணீரை துடைத்தாரா?பழங்குடியினர் வலி அவருக்கு தெரியுமா? பா.ஜ., ஆட்சியின்போது கர்நாடகா மேம்பாட்டில் முன்னோக்கிச் சென்றது. இப்போது ஊழலில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கையை கடைபிடித்து, ஹிந்துக்களுக்கு அநீதி இழைக்கின்றனர். பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி இல்லை. பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக்கை ஒழித்து, முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கினார்.விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். பா.ஜ., தேச பக்தர்கள் கட்சி.முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தி வீட்டிற்கு தீ வைத்தபோது, துரோகிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் நின்றது.வால்மீகி சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு மாநிலத்திற்கு சென்றது பற்றி, நிதி அமைச்சரான சித்தராமையாவிடம் ஏன், தலித், பழங்குடியின அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ