உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நின்ற லாரி மீது கார் மோதல் கோலார் பா.ஜ., பிரமுகர் பலி

நின்ற லாரி மீது கார் மோதல் கோலார் பா.ஜ., பிரமுகர் பலி

தேவனஹள்ளி: நின்ற லாரி மீது கார் மோதியதில், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் உயிரிழந்தார். கோலாரின் மாலுார் தாலுகா மதனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 36; ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். கோலார் மாவட்ட பா.ஜ.,வில் பிரமுகராகவும் இருந்தார். வரும் 2028 சட்டசபை தேர்தலில் சித்ரதுர்காவின் மொளகால்மூரு தொகுதியில் போட்டியிட ஏற்பாடுகளை செய்தார். இதற்காக அடிக்கடி சித்ரதுர்கா மாவட்டத்திற்கு பயணம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு உதவியும் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சித்ரதுர்காவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘ரேஞ்ச்ரோவர்’ காரில் சிவகுமார், அவரது நண்பர்கள் வினோத், பிரதீப், சந்தன், பவன் ஆகியோர், மாலுார் நோக்கி இரவில் வந்து கொண்டிருந்தனர். பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி ராணி கிராஸ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையோரமாக நின்ற லாரியின் பின்பக்கத்தில், கார் மோதியது. மோதிய விபத்தில் லாரிக்குள், கார் சொருகியது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாலையோரமாக நின்ற லாரி யை, ஓட்டி வந்த டிரைவர், ‘இண்டிகேட்டர் லைட்’டை ஒளிரவிடவில்லை என்றும், அபாயகரமான முறையில் லாரியை நிறுத்தி இருந்ததாலும், விபத்து நடந்ததாக காரை ஓட்டி வந்த பவன், போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை போலீஸ் தேடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை